குமரியில் கோட்டார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டார் சவேரியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயத்திலிருந்து பூஜை பொருள்கள் மற்றும் பூமாலைகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்பட்டது.

கன்னியாகுமரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டாறு புனித சவேரியார் திருத்தலத்தில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயத்தில் இருந்து வாசனை திரவியங்கள், பூஜை பொருட்கள் மற்றும் பூமாலைகள் போன்றவை மேளதாளம் முழங்க பங்கு  பேரவை மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர். 

இந்த ஊர்வலம் இராஜாவூர் தேவாலயத்தில் தொடங்கி மருங்கூர், குமாரபுரம்தோப்பூர், சுசீந்திரம், இலாக்குடி வழியாக கோட்டாறு சவேரியார் ஆலயம் சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து புனித சவேரியார் தேவாலயத்தில் உள்ள ஆலய நிர்வாகிகள் இந்த பொருட்களை பெற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இரவு புனித சவேரியார் கோவில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!