குமரி மாவட்டம் மயிலாடியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாஜக கிளைத் தலைவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் ஜெகநாதன், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் சி.எஸ்.சுபாஷ், மயிலாடி பேரூர் பாஜக தலைவர் ஆர்.என்.பாபு, ஒன்றிய பொதுச் செயலாளர் வக்கீல் சுயம்புலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் தர்மராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டையினை. மாவட்ட தலைவர் தர்மராஜன் வழங்கினார். இதில் பாஜக நிர்வாகிகள் பொன் வெனீஸ், விஜயன், பொன்னுலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.