ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள லட்சுமி தீர்த்தம் (திருக்குளம்) உள்பகுதி சுவர்கள் இடிந்து வருகின்றனர். இக்குளத்தின் உட்புறம் நான்கு பக்கமும் கருங்கற்களால் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.மேற்பகுதி மூளை சுவரின் ஒரு பகுதி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது.

நேற்று முன்தினம் குளத்தின் வடகிழக்கு பகுதி மூளையில் சுமார் 70 அடி அகலத்திற்கு இடிந்து விழுந்தது. நேற்று காலை தென்கிழக்குப் பகுதியிலுள்ள சுவரின் ஒரு பகுதி 50 அடி நீளம் இடிந்து விழுந்தது. தினமும் சுவர் இடிந்து விழுவதால் குளத்தின் அருகே குடியிருப்பவர்களும் குளத்தின் அருகில் உள்ள பள்ளி குழந்தைகளும் அச்சத்தில் உள்ளனர்.குளத்தில் உள்ள தண்ணீரை முழுமையாக வெளியேற்றி மீண்டும் உட்புற சுவரை கட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.