காணிமடம் மந்திராலயத்தில் கனமழையின் பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் மற்றும் விவவசாயிகள் விடுபட வேண்டி சிறப்பு வருண சாந்தி யாகம். நாமரிஷி தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் நடத்தினார்.யாகத்தில் தோன்றிய தெய்வீக உருவங்களால் பரபரப்பு.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த காணிமடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற யோகிராம் சுரத்குமார் மந்திராலயம் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம். மேலும் இந்த மந்திராலயத்தில் உலக நன்மை வேண்டி லோக ஷேம யாகம், மழை வேண்டி வருண யாகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் குமரி மாவட்டத்தில் கடந்த சுமார் 50 நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு கனமழையாக பெய்து வருகிறது. இதனால் மழைநீர் செல்ல வழியின்றி குடியிருப்புப் பகுதிகள், தெருக்கள், வீடுகள் மற்றும் விளை நிலங்களுக்குள் புகுந்து தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்தனர். மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்ய முடியாமலும், மரவள்ளிக்கிழங்கு, வாழை போன்ற பயிர்கள் மழைநீர் தேங்கி அழுகியதால் ஏராளமான நஷ்டங்களை சந்தித்தனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
எனவே கனமழையின் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விடுபடவேண்டியும், நோய் நொடிகளில் இருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும், வருண பகவானை ஆற்றுப்படுத்தும் விதமாகவும் காணிமடம் மந்திராலயத்தில் நாமரிஷி தபஸ்வி காமராஜ் சுவாமிகளால் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது இந்த யாகத்தில் பல்வேறு தெய்வீக உருவங்கள் தோன்றியது. இதனால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
தோன்றிய அனைத்து தெய்வீக உருவங்களுக்கும் பொன் காமராஜ் சுவாமிகள் பூ, பன்னீர், இளநீர், தேன், எள், பயறு, நெய் உள்ளிட்ட நவதானிய பொருள்கள் மற்றும் அவிற் பாகங்களையும் வழங்கினார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.