ஊர்ப்புற நூலகத்தில் நூலக வார விழா.

நூலகத்தை நவீனப்படுத்த  தீர்மானம் நிறைவேற்றம்.

அஞ்சுகிராமம் ஊர்ப்புற நூலகத்தில் நூலக வார விழா நடைபெற்றது. விழாவிற்கு  நூலகர் கிரேஸ்லெட் செல்வின் தலைமை தாங்கினார்.  அஞ்சுகிராமம் ஊர் நலச்சங்க தலைவர் ஹிட்லர், செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் நடராஜன், பழக்கடை ஜெகன் உட்பட வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் நூலகம் இருக்கும் இடத்தை மறு அளவீடு செய்து எல்லைகளை நிர்ணயம் செய்ய தாசில்தாரை சந்தித்து மனு கொடுப்பது, கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரத்தை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி பெற்று அதன் மூலமாக  நூலகத்திற்கு நவீன வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை மனு கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!