மண்வெட்டியோடு ஆர்பாட்டம்…தரகர்களுக்கு துணை போகும் தாசில்தார்.. மதுரையில் பரபரப்பு.

பாசன வாய்காலுக்கு செல்லும் கால்வாயை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் மண்வெட்டியுடன் விவசாயிகள் ஆர்பாட்டம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் ஊராட்சி பகுதியில் உள்ள விவசாயிகள் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றகோரி திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தை மண்வெட்டியுடன் முற்றுகையில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் 1, 2வது பிட் பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பாசன விவசாயம் நடைபெறுகிறது.

தற்போது நிலையூர் கால்வாயிலிருந்து சம்பா செய் வாய்க்காலுக்கு தண்ணீர் பாசன வசதி செல்வதை ரியல் எஸ்டேட் செய்பவர்கள் தடை செய்ததால் சுமார் 200 ஏக்கர் பாசன வசதிக்கு தண்ணீர் செல்லவில்லை .மாவட்ட ஆட்சியர், மற்றும் வட்டாட்சியரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி விவசாயிகள்,தனிப் பெரும் முதலாளிகளுக்கு விவசாய நிலத்தை பட்டா போட்டு தரகு வேலை பார்த்து வரும் தாசில்தாரை கண்டித்து மண்வெட்டியுடன் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.


இதனை தொடர்ந்து தாசில்தார் சரவணன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!