நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் இந்து மதம் என்பதே இல்லை.வெள்ளைக்காரர்களால் திணிக்கப்பட்டது இந்துமதம் தமிழர்கள் நாங்கள் விரும்பி ஏற்கவில்லை எனவும் சைவம்,வைணவம் என்ற சமய வழிபாடு மட்டுமே தமிழர்களுக்கு உடையது என பேசியதை இஸ்லாமியர்கள் மத்தியில் சீமான் தாய் மதம் திரும்பச் சொல்லி விட்டார் என பல்வேறு அவதூறுகளை பரப்பி வந்துகொண்டிருந்தார் இயக்குனர் அமீருக்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீங்கள் தொடர்ச்சியாக பொது வெளியிலேயே பேசுவதால் எங்களுக்கும் அந்த நிலைமை.
இன்று நீங்கள் கொடுத்திருந்த நேர்காணலில் அண்ணன் சீமான் தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு உடனடியாக தன்னிலை விளக்கம் கொடுத்து அறிக்கை விட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மேலும் நாம் தமிழர் கட்சியின் மீது உள்ள அக்கறையில் “அண்ணன் சீமானின் பேச்சுக்கள் தவறாக புரிந்து கொள்ளப்படக் கூடாது” என்று பேசுகிறேன் எனவும் கூறினீர்கள்.
உண்மையிலேயே நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டு இருந்தீர்கள் என்றால், நீங்களே நம்பாத அந்த பேச்சு தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தவுடன் அண்ணன் சீமான் அவர்களை அலைபேசியில் அழைத்து “அண்ணே நீங்கள் பேசிய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. உடனடியாக அதை விளக்கி அறிக்கை ஒன்று கொடுங்கள்” என்று கூறியிருக்கலாம்.
ஆனால் அதை விடுத்து சில பேர் மட்டுமே தவறாக புரிந்து இருந்த அந்தப் பேச்சை ஒட்டுமொத்த இஸ்லாமியரும் எதிர்நிலை எடுக்கும் அளவிற்கு வெளி உலகிற்கு கொண்டு வந்தது நீங்கள் மட்டும்தான். இப்பொழுது கூட நீங்கள் கட்சியின் மீது அக்கறை உள்ளதாக காட்டிக்கொண்டு அவதூறு கருத்துக்களை பரப்பிக் கொண்டே இருக்கின்றீர்கள். தயவுசெய்து உறவுகளாக பயணிக்கின்ற நாம் இத்துடன் இதை முடித்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகிறேன்.
மேலும் அண்ணன் மீது அளவற்ற அன்பு வைத்திருப்பது போலவும் அவரிடமிருந்து எதையும் பெறப்போவதில்லை என்றும் கட்சியின் இரண்டாம் நிலை பொறுப்பாளர்கள் அவரிடமிருந்து எதையோ பெறுவதற்காகவே அவரின் கருத்துக்களுக்கு ஆதரவாக இருப்பது போலவும் பேசிய உங்கள் பேச்சு உண்மையிலேயே மிக வருத்தத்திற்குரியது.
இந்தக் கருத்து நாம் தமிழர் கட்சியின் ஒட்டுமொத்த பொறுப்பாளர்களையும் உறவுகளையும் கொச்சைப்படுத்துவதாகவே நான் கருதுகிறேன். எல்லாவற்றையும் இழந்து இந்த அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் எங்களைப் போன்றவர்களால் இந்தக் கருத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.என்றாவது ஒருநாள் நீங்கள் உணர்வீர்கள் நாங்கள் சரியானவர்கள் என்று நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் செ.வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.