கிராம சபை கூட்டம், இந்திய குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் தினம் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) மற்றும் காந்தி ஜெயந்தி(2, அக்டோபர்) ஆகிய நான்கு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத்தலைவர்களால் கூட்டப்படுகிறது.
இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டதின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும்.
கிராம சபைக் கூட்டத்தில், தங்கள் கிராமங்களில் அரசு மதுக்கடைகள் நடத்துவதை தடை செய்து தீர்மானம் இயற்றினால், அக்கிராமங்களில் அரசு மதுக்கடைக்களை திறக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறையில் கொடுப்பதற்கான மாதிரி மனுவை பத்து ரூபாய் இயக்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன்:
அனுப்புநர்:
ரா.செல்வம், த/பெ
ராஜேஷ்வரன்,
(பி.செட்டி அள்ளி ஊராட்சியின் கிராம சபை உறுப்பினர் )
மாநில இணை ஒருங்கிணைப்பாளர்,
மாற்றத்திற்கான திறனாளிகள் அணி,
பத்து ரூபாய் இயக்கம்,
தீர்த்தார அள்ளி (கிராமம்),
பி.செட்டி அள்ளி (அஞ்சல்),
பாலக்கோடு (வட்டம்),
தருமபுரி (மாவட்டம்).
அ எண் : 636808.
செல்: +91 97862 20557
பெறுநர்:
திரு. காவல் ஆய்வாளர் அவர்கள்,
பாலக்கோடு காவல் நிலையம்,
பாலக்கோடு அஞ்சல்.
தருமபுரி மாவட்டம்.
பொருள்: கிராமசபை கூட்டம் பாதுகாப்பு கோருதல் தொடர்பாக:
ஐயா வணக்கம்:
நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்து வருகிறேன், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், பி.செட்டிஅள்ளி ஊராட்சியில் வருகின்ற 02-10-2021 தேதி அன்று காலை 10.00 மணிக்கு தமிழக அரசின் வழிகாட்டுதல் படி கிராம பாராளுமன்றமான கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
மேற்படி ஊராட்சியில் எனக்கு வாக்குரிமை உள்ளது. நான் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் உரிமை உடைய கிராம சபை உறுப்பினர் ஆவேன். அதனடிப்படையில் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று அதன் விவாதங்களில் கலந்து கொள்ளவும், பேசவும், தீர்மானம் கொண்டு வரவும், எனக்கு சட்டப்படியான உரிமையும் நியாய படியான கடமையும் உள்ளது. கிராமசபை கூட்டத்தில் புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோ பதிவு செய்யவும், உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .
என்னுடைய கிராமத்தில் கிராம வளர்ச்சிக்கான கோரிக்கைகளை கிராம சபையில் முன்வைத்து தீர்மானமாக கொண்டு வரவும் கிராமசபை நிகழ்ச்சிகள் நிரலில் (அஜென்டா) குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களின் மீது விவாதங்களில் நானும் பங்கேற்க உள்ளேன். மேலும் என்னுடைய கிராமத்தில் உள்ள கிராம சபை உறுப்பினர்களான சமூக ஆர்வலர்களும் மகளிர் குழுவினர் பலரும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்கள். விவாதங்களில் கலந்து கொள்ள ஆர்வமாக தயாராகி வருகின்றனர்.
ஆனால் சிலர் இதற்கு எதிராகவும் இடையூறாகவும் அச்சுறுத்தலாகவும் இருப்பதாகவும் கிராம சபை கூட்டத்தில் விவாதத்தில் சட்டவிரோதமாக குழப்பங்களையும் விரும்பத்தகாத பிரச்சினைகளையும் உருவாக்கக் முயற்சிப்பதாக தெரியவருகின்றது.
எனவே நான் கிராமசபை உறுப்பினர் என்ற முறையில் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று விவாதங்களில் கலந்துகொண்டு சட்டப்படியான என்னுடைய கடமைகளை நிறைவேற்றவும் உரிமைகளை பெறவும் எனக்கு காவல்துறையின் பாதுகாப்பு தேவைப்படுகின்றது.
எனவே கிராம சபை கூட்டத்தில் கலந்து உள்ள எனக்கும் மற்றவர்களும் உரிய பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள
இடம்:
நாள்:
நகல்கள்:
- காவல்துறை இயக்குநர் அவர்கள்
காவல்துறை தலைமையகம்
சென்னை. - காவல் துறை தலைவர் அவர்கள்
மேற்கு மண்டலம். - காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
தருமபுரி மாவட்டம்.
4 (தகவல்களுக்காக)
பொது செயலாளர்
பத்து ரூபாய் இயக்கம்
எண் 7 பழைய பேருந்து நிலையம் – இராசிபுரம் 637408

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.