சொத்து குவிப்பு வழக்கு…ராஜேந்திர பாலாஜி ஜே.பி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்- அண்ணாமலை சொன்ன தகவல்..?


ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மோடி தான் எங்கள் டாடி என்றும், பிரதமர் மோடி இருக்கும் வரை எங்களை யாரும் மிரட்ட முடியாது என பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீர் டெல்லி பயணம் – பாஜகவில் சேருகிறாரா?

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறாரா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீர் டெல்லி பயணம் – பாஜகவில் சேருகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை 11 மணியளவில் விமானம் மூலம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார். அவரது டெல்லி பயணம் அரசியல் அரங்கில் பரபரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சொத்து குவிப்பு வழக்கில் ராஜேந்திர பாலாஜி மீதான பிடி இறுகும் நிலையில் அவரின் டெல்லி பயணத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொகுதி மாறி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டார், இருப்பினும் திமுகவின் தங்கபாண்டியனிடம் அவர் தோல்வி அடைந்தார்.

மோடி தான் எங்கள் டாடி:

பால்வளத்துறை அமைச்சராக இருந்த போது அதிரடியான கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இவரின் கருத்துக்களால் சில நேரங்களில் அதிமுக தலைமைக்கே சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக 2019ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் “மோடி தான் எங்கள் டாடி” என்றும், பிரதமர் மோடி இருக்கும் வரை எங்களை யாரும் மிரட்ட முடியாது என பேசி பரபரப்பை கூட்டினார்.

பதவி பறிப்பு:

சர்ச்சை பேச்சுக்கு சொந்தக்காரராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி, அமைச்சராக இருந்த போதே பாஜக கொள்கைகளுக்கும், பிரதமர் மோடிக்கு இணக்கமான வகையிலுமே பேசி வந்தார். இதன் காரணமாகவே அவரிடம் இருந்து விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

சிறைக்கு செல்லலாம்…

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சொத்துகுவிப்பு வழக்கில் தமிழக அரசு ஆதாரங்களை தீவிரமாக திரட்டி வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் போலீஸ் விசாரணை நடத்த தடை இல்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், எந்த நேரத்திலும் ராஜேந்திர பாலாஜி சிறை செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள பாஜவில் இணைவது தான் ஒரே வழி என்பதால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லி சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை;-

தமிழகத்திற்கு பல்வேறு நல்லதுகளை செய்ய பாஜக நினைப்பதாகவும், அதற்கு ஏற்ப நல்லதுகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேகதாது அணை தொடர்பான பிரச்சினை முடிந்துவிட்டது.

மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் சேருகிறாரா என் கேள்விக்கு யூகங்களுக்கு பதில் தரமுடியாது என அண்ணாமலை பதிலளித்துள்ளார். பாஜக சித்தாந்தத்தை நம்பி யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். அரசியலில் எந்த கட்சியும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது. சுதந்திரமாக செயல்பட முடியாததால், உரிய மரியாதை கிடைக்காததால் பாஜகவை தேடி வருகின்றனர் என அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென இன்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்றார், அமித்ஷா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களை அவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அவர் பாஜகவில் சேரப் போவதாகவும் பேசப்படுகிறது.

இதனிடையே, டெல்லியில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். நாளை காலை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டா தலைமையில் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

error: Content is protected !!