மதுரை கூத்தியார்குண்டு விளக்கு பகுதியில் அமமுக கொடிகம்பம் வைப்பதில் காவல்துறைக்கு அமமுக நிர்வாகிக்கும் பிரச்சனை 6பேர் கைது செய்து சிறையில் அடைப்பு.

வருகிற மே மாதம் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்த நிலையில் மதுரை அருகே உள்ள கூத்தியார்குண்டு விளக்கு பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்க அக்கட்சியினரால் திட்டமிடப்பட்டு வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள கூத்தியார்குண்டு விளக்கு நான்கு வழிச்சாலை ஓரம் கொடி கம்பம் ஊன்றுவதற்கு அக்கட்சியினர் ஏற்பாடு செய்ய முயன்ற போது., அங்கு வந்த NHAI ஊழியர்கள் மற்றும் ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் அமமுக இளைஞர்அணி திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய கவுன்சிலர் திரவியகண்ணன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட நிர்வாகிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நான்குவழிச் சாலையில் கட்சிக் கொடி கம்பங்கள் வைப்பதற்கு அனுமதி இல்லை என தேசிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் காவல்துறையினர் கூறியதாக கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து ஏற்கனவே கடந்த சில மாதத்திற்கு முன் அதிமுக சார்பில் இதே நான்கு வழிச்சாலையில் எடப்பாடி கொடியேற்றி திறந்து வைத்தது எப்படி என்று கேள்வி எழுப்பி.? காவல்துறையுடன் வாக்குவாதத்தை ஈடுபட்டனர்.

திருமங்கலம் காவல்துறை துணைகண்காணிப்பாளர் வசந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும்., அதிமுகவினர் கொடியை வைத்தது போல் நாங்களும் வைப்போம் என்று கூறி தொடர்ந்து காவல்துறையுடன் அமலியில் ஈடுபட்டதாக அவர்கள் 7பேர் மீது வழக்கு பதிவு செய்து இரவோடு இரவாக நேற்று கைது செய்து இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார்.அதில் அமமுக இளைஞர் அணி திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரவிய கண்ணன் (33)., இளைஞர் அணி கிழக்கு ஒன்றிய தலைவர் வேல்முருகன் (28)., அமமுக நிர்வாகி சின்னன் (48)., எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணை தலைவர் திரவியம் (53)., மீனவரணி ஒன்றிய செயலாளர் பழனி குமார்(35)., தோப்பூர் கிளைச் செயலாளர் சேகர்., இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவர் பாலமுருகன்(32) உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு இதில் தோப்பூர் கிளை செயலாளரை மட்டும் கைது செய்யாமல் மற்ற 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்
துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.