
அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் 8 நாட்கள் சோதனை நடைபெற்றது.குறிப்பாக சென்னை, கரூர் ,கோவை, பெங்களூர், ஹைதராபாத் ,கேரளா உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்ற நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள அரசு இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை சோதனை அவருக்கு தொடர்புடைய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை தற்போது செந்தில் பாலாஜி இல்லத்தில் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது.
போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பதியப்பட்டுள்ள வழக்கில் வருமான வரித்துறை அளித்த தகவலின் அடிப்படையில் சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அத்துடன் சென்னை அபிராமபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.