சென்னை வந்த கோரமண்டல் ரயில் தடம் புரண்டு விபத்து… 20க்கும் மேற்பட்டோர் பலி..!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்கு வங்கம்- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு இடையே தினசரி அடிப்படையில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 பெட்டிகள் தடம் புரண்டன. வனப்பகுதியில் விபத்து நடந்துள்ளதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புவனேஷ்வரில் இருந்து 21 கி.மீ தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.50 ஆம்புலன்சுகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.