விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் இரண்டு முறை காங்கிரஸ்-திமுக கூட்டணி வேட்பாளராக ஜெயித்த மாணிக்கம் தாகூர் மூன்றாவது முறையும் வெல்வாரா? என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.
தொடர்ச்சியாக காலையில் இருந்து வெளியான தகவல்படி விஜய பிரபாகரன் முன்னிலையில் வகித்த நிலையில் 10:30 மணி அளவில் வெளியான தகவலின் படி மாணிக்கம் தாகூர் முதலிடத்திற்கு வந்திருந்தார். இப்போது மீண்டும் மாணிக்கம் தாகூர் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.
விருதுநகர் தொகுதியை பொருத்தவரைக்கும் தமிழ்நாட்டில் நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. அது போல காங்கிரஸ்-திமுக கூட்டணி வேட்பாளராக மாணிக்கம் தாகூர், அதிமுக தேமுதிக கூட்டணியின் வேட்பாளராக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளராக ராதிகா சரத்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கௌஷிக் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை என்று மொத்தம் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதோடு நான்கு தொகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும், இரண்டு அதிமுக எம்எல்ஏக்களும் இருக்கின்றனர்.
11 மணி அளவில் வெளியான தபால் ஒட்டுகளில் முடிவு படி தேமுதிகவின் விஜய பிரபாகரன் 40828 ஓட்டுகள் பற்றி முன்னிலையில் இருக்கிறார். சிட்டிங் காங்கிரஸ் எம்பியாக இருக்கும் மாணிக்கம் தாகூர் 39217 வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ராதிகா 16046 வாக்குகளும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கௌஷிக் 8959 வாக்குகளும் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
வழக்கமாகவே திராவிட கட்சிகளின் கோட்டையாகவே விருதுநகர் தொகுதி இருந்து வருகிறது. திமுக, அதிமுக தவிர அதிமுகவுக்கு வாக்கு வங்கி உள்ள தொகுதி இது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரண்டு முறை எம்பியாக விருதுநகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அது தவிர அதிமுக மூத்த தலைவராக இருந்த காளிமுத்து இதே தொகுதியில் எம்பி யாக வெற்றி பெற்று இருக்கிறார்.
அதே நேரத்தில் கடந்த 2009இல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று இருந்த நிலையில், 2014இல் அவர் போட்டியிட்டபோது தோல்வியுற்றார். மீண்டும் 2019 வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நிலையில் 2004 ஆம் ஆண்டும் மாணிக்கம் தாகூர் மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். ஆனால் தேர்தலுக்குப் பிறகு மாணிக்கம் தாகூர் தொகுதி மக்களை அதிகமாக சந்திக்கவில்லை என்ற அதிருப்தி இருக்கிறது.
ஆனாலும் விருதுநகரில் தங்கம் தென்னரசு (நிதி மற்றும் மின்சார துறை அமைச்சர்) மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை) இரண்டு மூத்த திமுக அமைச்சர்கள் இருப்பதால் அவர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு களத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதுபோல விஜயகாந்தின் மறைவிற்குப் பிறகு அவருடைய சொந்த தொகுதியில் அவருடைய மகன் முதல் முறையாக போட்டியிடுகிறார். ஜாதி ரீதியான ஓட்டுகள்,கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு ,இதைத் தாண்டி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அனுதாப ஒட்டு என்று சளைக்காமல் எல்லா விதத்திலும் மாணிக்கம் தாகூருக்கு டஃப் கொடுத்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியே இவரது வெற்றியை எதிர்பார்க்கும் அளவிற்கு இவரது வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
அதுபோல பிஜேபி கட்சியில் இணைந்த ஒரே வாரத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ராதிகா சரத்குமார். கட்சி ரீதியாக இல்லாவிட்டாலும் தான் சார்ந்த சமூகம் மற்றும் தன் கணவர் சார்ந்த நாடார் சமூகம் ஓட்டுகளையுமே பெரிதளவில் நம்பி தேர்தல் பணியாற்றினார். ஒரு சில சமுதாய அமைப்புகள் மற்றும் கணவர் தொடர்பில் இருக்கும் நட்பு வட்டாரங்கள் இவருக்கு ஆதரவாக தேர்தலில் பணி செய்தது. ஆனாலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் முடிவடையாததால் விருதுநகர் மக்களுக்கு பிஜேபி மீது அதிருப்தியும் இருக்கிறது. இதனால் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். விருதுநகர் தொகுதியில் 2000 ஆண்டுக்கு பிறகு நடந்த லோக்சபா தேர்தல் முடிவுகளின் விபரம் வருமாறு,
2009 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
பி மாணிக்கம் தாகூர் – 3,07,187
வைகோ (மதிமுக)- 2,91,423
கே பாண்டியராஜன் தேமுதிக- 1,25,229
எம் கார்த்திக் பாஜக- 17,336
2014ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
டி ராதாகிருஷ்ணன் (அதிமுக)- 4,06,694
வைகோ (மதிமுக)-2,61,143
எஸ் ரத்தினவேலு (திமுக )- 2,41,505
பி மாணிக்கம் தாகூர் – 38,482
2019 ஆம் ஆண்டில் தேர்தல் முடிவுகள்
பி மாணிக்கம் தாகூர் – 4,70,883
ஆர் அழகர்சாமி (தேமுதிக)- 3,16,329
எஸ் பரமசிவ ஐயப்பன்(AMMK) -107,615
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.