இல்லம் தேடி கல்வித்கல்வித் திட்டபிரச்சாரக் குழுவினர்டாஸ்மாக் கடை சென்று மது வாங்கி சென்ற சமூக வலைதலஙகளில் வைரல்
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் டாஸ்மாக் கடையில் மது வாங்கும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கற்றல் செயல்பாடுகளில் ஏற்பட்ட இடைவெளியைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு அரசு இல்லம் தேடி கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற திட்டத்தின் பயிற்சிப் பணிமனை, விழிப்புணர்வு கலைப் பயணம் துவங்கப்பட்டது. இந்தப் பணியில் தன்னார்வலர்கள் மூலம் தினமும் ஒன்று முதல் ஒன்றரை மணிநேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் என புதுமையான முறையில் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படும்.

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் தன்னார்வலர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கலைக்குழுக்கள் மூலம் பிரசாரம் செய்கிற பணிகளும் நடைபெற்று வந்தது.
அதன்படி, திருச்சியில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த 8 கலைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு, விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி நடைபெற்றது.
இந்த நிலையில், திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஒரு கலைக்குழுவினர் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். அந்த குழுவைச் சேர்ந்த சங்கர் என்பவர் பள்ளிக் கல்வித்துறையின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் என்ற டி ஷர்ட்டுடன் டாஸ்மாக் கடையில் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு மது வாங்கியதோடு, மதுவை ‘இல்லம் தேடி கல்வி’ பிரச்சார வாகனத்திலேயே வைத்து கொண்டு சென்றார்.

இந்த நிகழ்ச்சியை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவுசெய்து “விடியல் ஆட்சியில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தின்” அவலநிலைையை பாருங்கள் என திமுக அரசை விமர்ச்சித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் வைரலானாது. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவர் டாஸ்மாக் கடையில் மது வாங்கும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பலருடைய கண்டனத்தையும் பெற்றது.
இதுதொடர்பான புகார் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளிக்கு செல்ல, வழிகாட்டு நெறிமுறைகளை மீறி நடந்துகொண்ட சர்மிளா ஷங்கர் தலைமையிலான கலைக்குழு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கைளை முழுமையாக பிரச்சாரத்திலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.