குன்றத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனித் திருவிழா.

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சிறப்பு வாய்ந்த பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 15 நாட்கள் கொண்டாடப்படும் பங்குனி பெருவிழாவின் முக்கிய அம்சமான முருகன் தெய்வானை திருக்கல்யாணம் வரும் 23ஆம் தேதி மதுரை மீனாட்சி சொக்கநாதர் முன்னிலையில் நடைபெறுகிறது.

தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோயில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோயில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே தமிழ்க்கடவுள் முருகன் தான் நினைவுக்கு வருகிறது.

15 நாட்கள் திருவிழா
திருப்பரங்குன்றத்தில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் பங்குனித் திருவிழா தொடர்ந்து

கொடியேற்றம் வீடியோ

வருகிற ஏப்ரல் 2-ம்தேதி வரை 15 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக

28-ம்தேதி பங்குனி உத்திரமும்,

30-ம் தேதி பட்டாபிஷேகமும்,

31-ம் தேதி திருக்கல்யாணமும்,

ஏப்ரல் 1-ம் தேதி தேரோட்டமும்,

ஏப்ரல் 2-ம் தேதி தீர்த்த உற்சவமும் நடைபெறுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முருகன் தெய்வானை உடன் மணக்கோலத்தில் காட்சியளிக்கும் ஒரே தலம் முதற்படை வீடான திருப்பரங்குன்றம்தான்.

முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பங்குனி விழாவில் 12ஆம் நாள் நடைபெறுகிறது. முருகன் தெய்வானை திருமணத்தில் பங்கேற்க மதுரையில் இருந்து மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரரேசுவரர் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மகனின் திருமணத்திற்காக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் வருவதால் அன்றைய தினம் மாலை வரை கோவில் நடை அடைக்கப்படும். திருக்கல்யாணத்திற்காக சோலைமலை முருகப்பெருமான் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!