திருமங்கலம் அருகே சாலையில் சிதறிக் கிடந்த குளிர்பானங்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்

மதுரை வெள்ளாளப்பட்டி பகுதியில் இருந்து திருமங்கலம் நோக்கி குளிர்பானங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் வலையங்குளம் சுங்க சாவடி அருகே திடீரென டயர் வெடித்தது.

இதனால் நிலை தடுமாறிய சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி தடுப்புச் சுவரைத் தாண்டி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது

இந்த நிலையில் சரக்கு வாகனத்தில் இருந்து பறந்து சென்ற டயர் எதிரே வந்த லாரி மீது மோதிய நிலையில் முன்பக்க கண்ணாடி உடைந்து ஓட்டுநர் சிறிது காயத்துடன் தப்பினார்.

குளிர்பான சரக்கு வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுநர் பூஞ்சோனை லேசான காயங்களுடன் அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வீடியோவை பார்க்க:

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில்

கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான சரக்கு வாகனம் அப்புறப்படுத்தப்பட்டது.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!