இராஜபாளையம் சாலையை சீரமைக்கக்கோரி விபத்தில் பலியானவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது போல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்.

இராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையை சீரமைக்கக்கோரி விபத்தில் பலியானவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது போல் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதில் சங்கரன்கோவில் மூக்கு சாலையில் இருந்து வெம்பகோட்டை ,
ஆலங்குளம், சத்திரப்பட்டி செல்லும் சாலையில் உள்ளது சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில் அந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது மேலும் சத்திரப்பட்டி சாலையில் பாதாளச் சாக்கடை மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் விபத்துக்குள்ளாகி பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

இதனால் விபத்து அதிகம் ஏற்படுகிறது விபத்தினால் ஒருவர் இறந்து கிடப்பது போல் அவருக்கு இறுதி மரியாதை செய்து போல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசெல்லும் விதமாக கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் மாரியப்பன் தலைமையில் விபத்தில் உயிரிழந்து ஒருவர் படுத்து கிடப்பது போல் அவருக்கு இறுதி யாத்திரை செல்வது போல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

error: Content is protected !!