

நம்மாழ்வார், தஞ்சை மண்ணில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை படிப்பைக் கற்றவர். கற்றதை எளிய விவசாயிகளுக்குப் புரியும் மொழியில் உரைத்தார். புத்தகங்கள் பல எழுதியவர். அவரின் சிந்தனையும் செயல்பாடும் படித்த இளைஞர்களை இயற்கை வேளாண்மை பக்கம் திருப்பியுள்ளது. இன்று தானிய உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதில் நம்மாழ்வரின் முப்பதாண்டு கால உழைப்பு உள்ளது.

அவர் தொடங்கிய ‘வானகம்’ எனும் அமைப்பு, உயிர்ச்சூழல் நடுவமாய் உலக உணவுப் பாதுகாப்புக்கான பண்ணை ஆராய்ச்சி மையமாய் செயல்பட்டுவருகிறது. பட்டுக்கோட்டை அருகேயுள்ள பிச்சினிக்காடு கிராமத்தில் மீத்தேன் வாயுத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தச் சென்றிருந்தபோது, உடல் நலக்குறைவால் இதே நாளில் 2013ம் ஆண்டு நம்மாழ்வார் இயற்கையோடு இணைந்தார்.

இதையடுத்து இன்று இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டம் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.