60வது வார்டு பகுதியில் சாக்கடையில் உள்ள அடைப்பை எடுக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாநகராட்சி 60 வது வார்டு அவனியாபுரம் அயன்பாப்பாகுடி இந்திரா நகர் பர்மாகாலனி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.
அவ்வாறு செல்லும் கழிவுநீர், சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக தேங்கியுள்ளது. அதனால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ‘இந்த அடைப்பை சரி செய்து, கழிவுநீர் சீராக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மாநகராட்சி நிர்வாகத்தினருக்கு பலமுறை புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், தேங்கி உள்ள கழிவுநீரில், ஏராளமான கொசு உற்பத்தியாகி, பகுதிவாசிகளை கடித்து துன்புறுத்துகிறது. சாக்கடையில் உள்ள அடைப்பை சரிசெய்து, சாக்கடை கழிவுநீர் தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.