மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் வ.உ.சி பேரவையினர் 2021 பொது தேர்தலை புறக்கணிக்க போவதாக முடிவு.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் கிராமத்தில் வெள்ளாளர் வேளாளர் கூட்டமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு வ.உ.சி பேரவை மாநில தலைவர் அர்ச்சுனன் வேளார், துணைத் தலைவர் ரமேஷ் குமார், மாவட்ட மகளிரணி தலைவி ராமலட்சுமி ,மாவட்ட செயலாளர் சிங்கமுத்து, மாவட்ட துணைத்தலைவர் மின்னல்,பொதுச்செயலாளர் வெற்றிவேல், பொருளாளர் மதிச்சியம் சரவணன்,துணைச் செயலாளர் சுந்தரம், மாவட்ட அமைப்பாளர் பாலமுருகன் வினோத்குமார் மற்றும் சிவபிரசாத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேசும்போது நாங்கள் வருகின்ற 2021 பொது தேர்தலை புறக்கணிக்க போவதாக முடிவு செய்துள்ளோம்.
வெள்ளாளர் இனம் என்பது சுமார் இரண்டாயிரம் ஆண்டு பழமையானது எங்கள் சமுதாயத்தை வேளாளர் வெள்ளாளர் என தமிழகத்தின் பல பகுதிகளில் அழைத்து வருகின்றனர். மண்டலங்களின் அடிப்படையில் பாண்டிய மண்டலத்தில் பாண்டிய வேளாளர் ஆகவும் தொண்டை மண்டலத்தில் தொண்டை என்ற சைவ வேளாளர் எனவும் கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாளர் எனவும் சோழமண்டலத்தில் சோழ வேளாளர் எனவும் தொல்காப்பியத்தில் குலமக்கள் பிரிவில் வேளாளர் என பொதுவாகவும் அழைத்து வருகின்றனர்.
எங்களுக்காக கல்வெட்டுகள்,செப்பேடுகள் ஓலைச்சுவடிகள் போன்ற பழமையான ஆதாரங்கள இருந்து வருகிறது.ஆனால் எந்த வித ஆதாரமும் இல்லாத பட்டியலின பிரிவினருக்கு எங்கள் ஜாதி பெயரை வழங்கியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
எங்கள் சமுதாய பெயரை எந்தவித கல்வெட்டு மற்றும் வரலாற்றுப் பதிவுகள் இல்லாத மாற்று சமுதாயத்திற்கு வழங்கப் போவதாக சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்னும் முப்பது தினங்களில் தேவேந்திரகுல வேளாளர் என பட்டியலின சமுதாயத்தினரை அழைக்க அரசாணை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். மற்ற சமுதாயத்தினருக்கு எங்கள் ஜாதி பெயரை வழங்கக்கூடாது என கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்,மறியல் போராட்டம் என தொடர்ச்சியாக நாங்கள் நடத்தியும்
தமிழக அரசு எங்களை அழைத்து இதுவரை பேசவில்லை ஆகையால் வருகின்ற 2021 பொதுத் தேர்தலை திமுக,அதிமுக,பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் புறக்கணிக்க போவதாக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
தமிழகத்திலுள்ள ரிசர்வ் தொகுதி தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் எங்கள் வேளாளர் இன வேட்பாளரை நிறுத்தி எங்கள் வலிமையை காட்ட இருக்கிறோம்
மேலும் தமிழகத்திலுள்ள மற்ற ரிசர்வு தொகுதிகளிலும் தேர்தலைப் புறக்கணிப்பதற்கு மாநில தலைமையை வலியுறுத்துவோம்.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக எங்கள் சமுதாய வாக்குகள் சுமார் இரண்டரை கோடி பேர் உள்ளனர்.அதாவது மொத்த வாக்குகளில் 33 சதவீதம் ஆகும்
ஆனால் தமிழக அரசு அறிவித்துள்ள பட்டியலின சமூகத்தினர் மொத்தத்தில் 3 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிகளுக்கு தேர்தலில் ஆதரவு கொடுப்பது பற்றி மாநில தலைமையை கலந்து பேசி முடிவு செய்வோம் என்றனர்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்து வாட்ஸ்அப் குழுவில் இணையவும்
