நாகர்கோவிலில் நான்கு டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து மாநகராட்சி ஆணையர் அதிரடி ஆய்வு. நான்கு டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல். ரூ.85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertising

தமிழக அரசு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் குமரி மாவட்டத்திலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவும் அதனை பயன்படுத்தவும் தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மீண்டும் அதிகரித்து வருவதாக மாநகராட்சி ஆணையருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆணையர் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

இதன்படி நாகர்கோவில், கோட்டார், வடிவீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதமும், ஏற்கனவே அபராதம் விதித்து இரண்டாவது முறை பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு கூடுதல் அபராதமும் விதிக்கப்பட்டது.

Leave a Reply

error: Content is protected !!