மனைவியை 13 இடங்களில் கத்தியால் குத்திய கணவன்-போலீஸ் வலைவீச்சு

சென்னை: சென்னை அபிராமபுரம் ராதாகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அஜித்(எ) சைக்கோ அஜித்(27). இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவரது மனைவி ஆஷா(23). ஆஷாவின் நடத்தையில் அஜித்திற்கு சந்தேகம் இருந்துள்ளது.

இதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வழக்கு ஒன்றில் சிறை சென்று வந்த அஜித்திற்கு அவரது மனைவி பல ஆண்களுடன் பேசி வந்ததாக சிலர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் போதையில் ஆஷாவை கத்தியால் இடது கையில் 7 இடங்களிலும், வலது கையில் 3 இடங்களிலும், தலையில் 3 இடங்களிலும் என 13 இடங்களில் குத்திவிட்டு தப்பினார்.

ஆஷாவை அருகில் இருந்த சுப்புலட்சுமி மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு ஆஷா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் அபிராமபுரம் போலீசார் அஜித்குமாரை தேடுகின்றனர்.

Leave a Reply

error: Content is protected !!