காவல்துறையினருக்கு பேருந்தில் இலவசப் பயணம்..முதல்வர் அறிவிப்பை ஏற்காத போக்குவரத்துத்துறை.. மறு உத்தரவு வழங்க நடவடிக்கை.?

எங்களுக்கு உத்தரவு இல்லை என அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் போலீசாரை நடத்துனர் டிக்கெட் கேட்டு பேருந்தை நிறுத்தியதால் பரபரப்பு

திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து செய்யாறு செல்லும் அரசு பேருந்தில் போளூரில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ராதா என்பவர் பணிக்காக சென்றுள்ளார். அப்போது பேருந்து நிலையத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் வெளி வந்த அரசுப் பேருந்து அவலூர்பேட்டை சாலை பிரியும் சிக்னல் அருகே பெண் போலீசாரிடம் டிக்கெட் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாவட்டத்தில் பயணம் செய்ய டிக்கெட் அவசியமில்லை எனவும் அடையாள அட்டை இருந்தால் போதும் என பெண் காவலர் நடத்துனரிடம் கூறியுள்ளார். அப்போது இது போன்ற உத்தரவுகள் எதுவும் போக்குவரத்து துறைக்கு இல்லை எனவும் டிக்கெட் அல்லது வாரன்ட் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் முன்னிலையில் பெண் போலீசாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஓட்டுநர் பேருந்தை சுமார் பத்து நிமிடத்திற்கு மேலாக சாலையோரம் நிறுத்திவிட்டு “பெண் காவலரை கீழே இறங்கி வேற பேருந்தில் ஏறி சென்று போ” என்று ஒருமையில் பேசியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த பெண் காவலர் பேருந்தை விட்டு இறங்காமல் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுங்கள் அவர்களிடம் என்னுடைய நியாயமான கோரிக்கையை முறையிடுகிறேன் அவர்கள் வந்து டிக்கெட் அல்லது வாரண்ட் இருந்தால் மட்டுமே பயணிக்கலாம் என்ற சட்டம் இருந்து வருகிறது என்று கூறிய பிறகு பேருந்தை விட்டு கீழே இறங்குகிறேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தி நேரத்தை வீணாக்குவது நியாயமா..? உங்களது சண்டையை வேறு இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள் அவசரமாக நாங்கள் செல்ல வேண்டும் என பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் கூறிய பிறகு பேருந்தை இயக்கி உள்ளார் ஓட்டுநர்.

காவல்துறையினர் தங்களது சொந்த வேலைகளுக்கு செல்வதை தவிர பணி சம்பந்தமாக செல்லும்போது அடையாள அட்டைையை காண்பித்து பயணம் செய்யலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் அறிவித்திருந்திருந்தது அனைவரும் வரவேற்று பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பெண் மற்றும் ஆண் காவலர்கள் பணி சம்பந்தமாக செல்லும்போது பேருந்து நடத்துனரிடம் அடையாள அட்டையை காண்பித்து விட்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்து துறையினருக்கு மறு உத்தரவு பிறப்பித்து காவலர்கள் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ள தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பெண் காவலரை பேருந்திலிருந்து இறங்க சொல்லி பேருந்தை நிறுத்தி பொதுமக்களின் நேரத்தை வீணடித்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையும் எழுந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!