
பட்டா பெயர் மாற் றம் செய்வதற்காக, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், என்.புதுக்கோட்டையை சேர்ந்தவர் விவசாயி தங்கராசு. அவரது மகன் முருகேசன், 31. அவருக்கு, தனது தந்தை வழி விவசாய நிலம் சொத்தாக வந்துள்ளது. அந்த நிலத்துக்கு, வாரிசுதாரர் என்ற முறையில், பட்டா பெயர் மாறுதல் கேட்டு, என்.புதுக்கோட்டை வி.ஏ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அதற்காக, வி.ஏ.ஓ., குழந்தைவேலு, 51 என்பவர், 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் தரவிருப்பம் இல்லாத முருகேசன், இது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அவர்கள் அளித்த ஆலோசனையின் அடிப்படையில், , காலை, 11:00 மணிக்கு, என்.புதுக்கோட்டை அலுவலகத்தில், வி.ஏ.ஓ., குழந்தைவேலுவிடம், 3,000 ரூபாய் லஞ்சம் வழங்கினார்.
அப்போது, மறைந்திருந்த டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையிலான போலீசார், வி.ஏ.ஓ., குழந்தைவேலுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டா பெயர் மாற்ற, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,கைது செய்துள்ள சம்பவம், மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.