திமுக – நாம் தமிழர் இடையே எச்சரிக்கை போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சங்கி என்றும் பாஜகவின் பி டீம் என்றும் திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதனால் ஆவேசம் கொண்டு திமுகவினரையும், திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினையும், திமுகவின் இளைஞரணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் சீமான், உச்சகட்டமாக சென்னை அம்பத்தூரில் அண்மையில் நடந்த நிகழ்வில் பேசியபோது செருப்பைத் தூக்கிக் காட்டி எச்சரித்து பேசியிருக்கிறார்.

திமுக தான் சங்கி:
திமுகவுக்கு எதிராக இதுவரைக்கும் சீமான் பேசியதிலேயே இந்த பேச்சுதான் உச்சகட்டமாக அமைந்திருக்கிறது. ’’யாருடா உண்மையான சங்கி. திமுகதாண்டா உண்மையான சங்கி. சொங்கிப்பயளுகளா? யார பார்த்து யாரடா சங்கின்னு சொல்லுறீங்க. செருப்பு இருக்கு பாருங்க… ’’என்று சொல்லிக்கொண்டே காலில் கிடந்த செருப்பை கழற்றி தூக்கிக்காட்டி எச்சரிக்கிறார்.
கதறும் திமுக:
தொடர்ந்து அவர், ’’ஜனநாயகவாதியாக இருக்கும்படி என்னை பார்த்துக்கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்பு. என்னை வெறியனாக்கிவிடாதீர்கள்… சிக்கலாகிவிடும் என ஆவேசமடைந்தார் சீமான்.இதைத்தொடர்ந்து டுவிட்டரில் #கதறும்_திமுக என்ற ஹேஷ்டேக்கு பதிவிட்டு டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

சீமான் தூக்கி காட்டிய செருப்பு கருப்பு சிவப்பு நிறம். அந்த செருப்பைத்தான் அவர் காலில் போட்டிருக்கிறார். தற்போது மட்டுமல்ல. அவர் 2019ம் ஆண்டே இந்த செருப்பை போட்டிருக்கிறார் என்பதற்கான ஆதாரத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.
திராவிட செருப்பு:
கையில் தூக்கி காமிச்சது வேனா இன்னிக்கா இருக்கலாம்… ஆனால் திராவிடத்த காலுக்கு கீழ போட்டு பல நாள் ஆச்சி…என்கிறார் நெல்லை செல்வின். இந்த செருப்பு கலர் ஏதோ கட்சி கொடி குறியீடாக இருக்குமோ? நமக்கு எதுக்கு வம்பு? பேயிக்கும் பேயிக்கும் சண்டை என்கிறார் கொங்கு சித்தர் என்பவர். திராவிட செருப்பு என்றும், அதை சீமான் காலில் போட்டிருப்பதாகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாம் தமிழர் சீமானுக்கு எச்சிரிக்கை என தொண்டி திமுக சார்பில் போஸ்டர் ஒட்டினர்.

அதற்கு பதிலடியாக தமிழ் எங்கள் உயிருக்கு சமம் அடக்குமுறை எங்கள் தலைமுடிக்கு சமம், எச்சரிக்கை, எச்சரிக்கை, எச்சரிக்கை தமிழினத்தை அழித்தொழித்த கயவர் கூட்டமே, அண்ணன் செந்தமிழன் சீமானை பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது நாங்கள் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல தேசியத்தலைவர் பிரபாகரனின் பிள்ளைகள் என நாம் தமிழர் கட்சியினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இ
ங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.