கள்ளச்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையத்தில் உயர்மின்னழுத்த கம்பி உரசியதில் நெல்அறுவடை இயந்திரம் எரிந்து சேதமடைந்தது. இதனால் 5 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டன.கச்சிராயபாளையத்தை சேர்ந்தவர் மாசிலாமணிக்கு சொந்தமான விளைநிலத்தில் நெல் அறுவடை பணிகள் நடந்தது. நேற்று மதியம் 2 மணியளவில், நெல் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை பணியை மேற்கொண்ட போது உயர்மின்னழுத்த மின்கம்பி மீது அறுவடை இயந்திரத்தின் மேற்புற கூரை உரசியதில் அறுவடை இயந்திரத்திற்குள் இருந்த வைக்கோலில், தீப்பொறி விழுந்து பற்றி எரிந்தது.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர்.இதில் அறுவடை இயந்திரத்தின் பெரும்பாலான பகுதிகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும் தீயில் கருகின. இதைக்கண்ட விவசாயி கதறி அழுதனர். இந்த சம்பவத்தால் கச்சிராயபாளையம் பகுதியில் மதியம் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.