பாரதியாரின் 140 -வது பிறந்தநாள் விழா..நாம் தமிழர் கட்சி சார்பில் மரியாதை..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் உள்ள பாரதியார் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது

சுப்பிரமணிய பாரதி 1882-ம் ஆண்டு டிசம்பரம் மாதம் 11-ந்தேதி பிறந்தார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.

தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.

இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை பாராட்டி ‘பாரதி’ என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரச சபையால் வழங்கப்பட்டது.

1882-ம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்தார் பாரதி. தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897-ம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898-ம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.

பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904-ம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது.

வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் பாண்டியன் நகர் பூங்காவில் அமைந்துள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மதுரை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு பாசறை செயலாளர் முருகன் தலைமையில் திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் மருதமுத்து முன்னிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மேற்கு ஒன்றிய செயலாளர் அழகு ராஜா, தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் வடிவேலன்,பகுதி தலைவர் ஜெகநாதன்,பகுதி செயலாளர் கரிகாலன்,பகுதி செய்தி செய்தி தொடர்பாளர் பலராமன்,96 ஆவது வட்ட செயலாளர் வசந்த் மற்றும் சூர்யா, சங்கர், விஜயன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

  1. Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!