பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்த் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டு காலம் தாலாட்டிக் கொண்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீளா தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டதை சுட்டிகாட்டியுள்ளார்.
விலைமதிப்பில்லாத எஸ்பிபி இசைக்கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்வது ஒன்று மட்டுமே அவருக்கு தருகின்ற சரியான அங்கீகாரமாக இருக்கும். இதனை உணர்ந்து, செயல்படுத்த முன்வந்துள்ள முதலமைச்சருக்கு கலை உலகின் சார்பிலும், இசை ரசிகர்களின் சார்பிலும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக இயக்குனர் பாரதிராஜா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.