கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நான்கு வயது மகனுக்கு அடிக்கடி உடல் நல குறைவு ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த தொழிலாளி மனைவி இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுண்டபற்றிவிளையை சேர்ந்தவர் கண்ணன்(43). மர தொழிலாளியான இவருக்கு சரஸ்வதி (37) என்ற மனைவியும்அனுஷ்கா (10). என்ற பெண் குழந்தையும் விகாஸ் (4) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.
இந்நிலையில் விகாசுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் பெருமளவு பணம் மருத்துவத்திற்காக செலவழிந்து கண்ணன் கடனாளி ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் கண்ணன் விரக்தி அடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்நிலயில் தனது மனைவி சரஸ்வதி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.