விடுதலைப்புலிகளை களங்கப்படுத்தும் நோக்கம்! 13வது திருத்தச்சட்டம்-பலி கெடாவாகப் போவது யார்? அதிர்ச்சியூட்டும் பின்னணி!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்ற செய்தி குறித்த தற்போது ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த செய்தி தற்போது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் இச்செய்தி பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் விரைவில் தமிழீழம் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இன்னைக்கு நம்முடைய தமிழின தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றிய உண்மை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றேன். இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பிய சிங்கள மக்களின் போராட்டம் தமிழின தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழ் இன தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக்க நலமுடன் இருக்கிறார் என தெரிவித்துக் கொள்கின்றேன். தஞ்சையில் நேற்று (பிப்.13) காலை செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் மனைவி மற்றும் மகளுடன் நலமுடன் இருக்கிறார். அவருடைய குடும்பத்தாருடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அவர்களுடைய அனுமதியுடன்தான் நான் இத்தகவலைத் தெரிவிக்கிறேன்.

இவ்வளவு காலம் கழித்து பிரபாகரன் பற்றி இப்போது சொல்ல வேண்டிய நிலை ஏன் வந்தது என்றால், அதற்கான சூழல் தற்போது இலங்கையில் கனிந்துள்ளது. ராஜபக்ச குடும்ப ஆட்சி இலங்கையில் முடிவுக்கு வந்துள்ளது. அதனால் இத்தகவலை வெளியிடுகிறேன். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையைத் தரும். விரைவில் பிரபாகரன் தமிழீழம் தொடர்பாக விரிவான அறிக்கையை வெளியிடுவார். ஆனால் பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்பதை இப்போதைக்கு அறிவிக்க முடியாது. பிரபாகரன் மக்கள் முன் தோன்றும்போது தமிழக அரசு அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார்.இலங்கையில் தமிழ் ஈழம் அமையப் பாடுபட்டவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன். கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது மனைவி, மகள், மகன்கள் அந்தப் போரில் கொல்லப்பட்டதாக அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு உறுதிப்படுத்தியது. இந்நிலையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் விரைவில் தமிழீழம் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் உலகத் தமிழர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், அவரின் சர்ச்சைப் பேச்சிற்கு, வட தாயகத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் அமிர்தநாயகம் நிக்ஸன், பதிலடி கொடுக்கும் வகையில், தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார். ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை இல்லாதொழிக்காமல், அவர்கள் கோரிய அரசியல் விடுதலையை (Political Emancipation) பெற்றுக் கொடுத்திருந்தால், இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இன்று இந்தியாவுக்கு முழுமையான பாதுகாப்புக் கிடைத்திருக்கும்.2009 இன் பின்னர் அமெரிக்கா கூட பிராந்தியத்துக்குள் வலிந்து மூக்கை நுழைத்திக்க வேண்டிய நிலையும் உருவாக்கியிருக்காது.

தமிழ் பேசும் தாயகத்தில் சீனா ஆதிக்கம் செலுத்தியிருக்கவும் முடியாது.

அத்துடன் சிங்கள ஆட்சியார்களிடம் கையேந்தி, மேலும் விட்டுக் கொடுத்துச் சிங்கள இராஜதந்திரத்துக்கு அடிபணிந்திருக்க வேண்டிய அவமானம் இந்தியாவுக்கு ஏற்பட்டும் இருக்காது. இந்தியா 1987 இல் கொண்டு வந்த பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைக் கூடத் தற்போது பௌத்த தேசியவாதம் ஏற்கவில்லை என்பதற்காகவும், புவிசார் அரசியல் – பொருளாதார தேவைகளுக்காக இலங்கைக்கு பில்லியன் கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுத்தும், சிங்களம் அடங்குவதாக இல்லை என்றும் புரிந்த நிலையிலும் தற்போது உண்மைக்கு மாறான (False propaganda) பிரச்சார உத்தியை இந்தியா கையாள ஆரம்பித்திக்கின்றது.

அதுதான் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற பிரச்சாரம்.

இதனை இந்தியத் தொலைக்காட்சிகள் அதுவும் தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகள் ஊடக ஒழுக்க விதிகளைக் (Media Code of Conduct) கடந்து பிரச்சாரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆகவே இலங்கையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர உண்மைக்கு மாறான பிரச்சார உத்தி இந்தியாவுக்குத் தேவையா? ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நியாயமானது. (Freedom Struggle is Justified) அது பயங்கரவாதம் அல்ல என்று அமெரிக்க – இந்திய அரசுகளுக்கு ஏலவே அந்தப் புரிதல் இருந்தது.

ஆனாலும் புலிகளின் போராட்ட முறைகள் – மரபு வழி இராணுவ உத்திகள் (Methods of Fighting – Traditional military tactics) சர்வதேசத்துக்கு முன்னுதாரணமாக வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் 2009 இல் போராட்டத்தை இல்லாதொழிக்க வல்லரசுகள் அப்போது இலங்கைக்கு ஒத்துழைத்ததாகவே அன்று விமர்சனங்கள் எழுந்தன. அதன் விலியை இன்று இந்தியா அனுபவிக்கின்றது என்பதை, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற பிரச்சாரத்தின் மூலம் பட்டவர்த்தனமாகிறது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறி தமிழர் தாயகப் பிரதேசங்களில் மற்றுமொரு இராணுவக் கெடுபிடி மற்றும் வேறு வகையிலான தமிழ் இன அழிப்புக்கும் இந்தியா வழி சமைக்கிறதோ என்ற ஒரு சந்தேகமும் தற்போது எழுகின்றது. இப்படி எந்த அநியாயம் நடத்தாலும் சரி, இலங்கையில் தமக்கு அரசியல் – பொருளாதார லாபங்கள் கிடைத்தால் போதும் என்ற நோக்கில் இந்தியா எந்த அணுகுமுறைக்கும் கீழ் இறங்கிச் செல்லும் போல் தெரிகிறது இந்தப் பிரச்சார உத்தி.

வடஇந்தியா வழிபாட்டு முறைகளை தமிழர் பிரதேசங்களில் திணிக்க பா.ஜா.காவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட திரிபுபடுத்திய இராமாயண இதிகாசக் கதைகள் தமிழகத் தொலைக்காட்சிகளுக்குப் புரிந்திருந்தால், உண்மைக்கு மாறான அந்தப் பிரச்சார உத்திக்கு எடுபட்டிருக்கமாட்டார்கள்.இந்திய நரித்தன உத்திக்கு (Fox strategy) பழ நெடுமாறன் பலியாகிவிட்டார். அதற்குள் காசி ஆனந்தன் வேறு.

தமிழகத்தின் சில தொலைக்காட்சிகள் இந்துத்துவா கொள்கையின் பிரகாரம் செயற்படுவதால், ஈழத்தமிழர்களுக்கு அவை சாதகமாக இருக்காது என்பதைக் கூட பழ நெடுமாறான், காசி ஆனந்தன் ஆகியோருக்குப் புரியாமல் போனால் பரிதாகம் என்ன? என பிரபல பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!