
மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் மணிகண்டன்(40) எனபவர் இந்து மக்கள் கட்சியில் தென் மாவட்ட துணை செயலாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது கடை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது பின்னால் வந்த இரண்டு மர்ம நபர்கள் அரிவாளால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த மணிகண்டன் மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இது குறித்து ஜெய்ஹிந்தபுரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.