கவலையை மொத்தமாக விரட்டியடிப்பது எப்படி?

வாழ்க்கையில் தவறுகள் என்று எதுவுமே இல்லை – பாடங்கள் மட்டுமே உள்ளன.

எதிர்மறை அனுபவம் என்று ஒன்றுமே கிடையாது. வளரவும், கற்றுக் கொள்ளவும், சுய கட்டுப்பாடு, தன்னறிவு ஆகியவற்றுக்கான பாதையில் முன்னேறிச் செல்லவுமான வாய்ப்புகள் மட்டுமே அங்கு உண்டு.

போராட்டத்திலிருந்து வலிமை கிடைக்கிறது. ஒவ்வொரு வலியும், வேதனையும் ஒரு அற்புதமான ஆசானாக அமையக் கூடும்.

சீனமொழியில், ‘நெருக்கடி’ என்ற சொல்லுக்கான இரு சக எழுத்துக்களில் ஒன்று ‘ஆபத்து’ என்றும், மற்றது ‘வாய்ப்பு’ என்றும் தனித் தனியே பொருள்படும்.

வலியைத் தாண்டி அப்பால் செல்ல வேண்டுமானால், நாம் முதலில் அதை அனுபவித்து உணர வேண்டும்.

வேறு விதமாகச் சொல்வதானால், ஒரு பள்ளத்தாக்கின் அடி ஆழத்தை முதலில் கண்டுணர்ந்து கொள்ளாமல், ஒரு மலையுச்சியில் நிற்பதன் பேரானந்தத்தை நாம் எவ்வாறு உண்மையில் தெரிந்து கொள்ள முடியும்?

நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களை நேர்மறையானவை, எதிர்மறையானவை என்று தரம் பிரித்துப் பார்ப்பதை நாம் நிறுத்த வேண்டும்.

மாறாக இவற்றை வெறுமனே அனுபவித்து உணர்ந்து கொள்ள வேண்டும். அவற்றைக் கொண்டாடி ஏற்றுக் கொண்டு அவற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிகழ்ச்சியும் நமக்கு ஒரு பாடத்தைத் தருகிறது. இந்தச் சின்னச் சின்னப் பாடங்கள், நமது உள் மற்றும் வெளி வளர்ச்சிகளுக்கு சக்தியூட்டுகின்றன.

பெரும்பாலானவர்கள் தமக்கு மிகவும் அதிகமாகச் சவால்விட்ட அனுபவங்களிலிருந்து தான் மிகவும் அதிகமான வளர்ச்சியை பெற்றுள்ளார்கள்.

ஒருவேளை, எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேர்ந்து, கொஞ்சம் ஏமாற்றமடைந்தால், இயற்கையின் விதிகள், எப்போதுமே, ஒரு கதவு மூடும்பொழுது, மற்றொன்று திறப்பதை நிச்சயமாக நடைபெறச் செய்கின்றன என்பதை மட்டும் மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த விதியை நமது தினசரி வாழ்வில் இடைவிடாமல், தொடர்ந்து பயன்படுத்த தொடங்கிவிட்டால், ஒவ்வொரு நிகழ்ச்சியையும், ஒரு நேர்மறையான, வலிமையும், தன்னம்பிக்கையும் ஊட்டும் சம்பவமாக நம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டால், நம் கவலையை மொத்தமாக விரட்டியடித்து விடுவோம். கடந்த காலத்தின் கைதியாக இருப்பதை நிறுத்தி விடுவோம்.

அதற்குப் பதிலாக நமது எதிர்காலத்தை உருவாக்கும் சிற்பியாகிவிடுவோம்.

ஒரு இருண்ட சூழ்நிலைக்கு மறுபக்கமாக ஒரு ஒளியுள்ள பக்கம் உள்ளது. அதைத் தேடுவதற்கான துணிவு உங்களிடம் இருந்தால்…

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!