பாமரர்களை பராரியாக மாறிவருவதனை சொல்லும் ஏதார்த்தபதிவு..!!!

மகளிர் குழு உறுப்பினர்களுக்கு கடன் உதவி வழங்குகிறோம் என்னும் பெயரில் சில கந்து வட்டி கும்பலிடம் சிக்கி அல்லல்படும் பெண்கள்…..
(நமது ஊரில் நடந்து கொண்டுள்ள….
உண்மை நிகழ்வு 5 நிமிடம் பொறுமையாக படிக்கவும்)
பொறுப்பில்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு பணம் கொடுக்காத ஆண்களின் மனைவிகள் கணவனின் சொற்ப வருமானத்தில் சாப்பாட்டு செலவு வீட்டு வாடகை பிள்ளைகளின் பள்ளி கட்டணம் மருத்துவம் என கஷ்டப்படும் பெண்கள் மிகக் குறைந்த வருமானத்தில் பற்றாக்குறையுடன் குடும்பம் நடத்தும் பெண்கள் குடும்ப கஷ்டத்தின் காரணமாக வீட்டு வேலை கூலி வேலைகளுக்கு செல்லும் பெண்களை குறிவைத்து…
தனியார் நிதி நிறுவனம் என்னும் பெயரில் சில
கந்து வட்டி கும்பல்கள்…
மகளிர் குழு என
10 பெண்களை ஒருங்கிணைத்து
முதலில் தலா 20,000 ரூபாய் கடனாக வழங்கப்படுகிறது…
அந்த தொகை
52 வாரத்திற்க்கு
அசலும் வட்டியும் சேர்த்து வாரம்
ரூ625 கட்ட வைக்கிறார்கள்…
(52×625=32,500)
(அசல் 20,000+12,500
வட்டி)
10 பேரில் யாரவது ஒருவர் வீட்டில்
சாவு விழுந்து
இருந்தால் கூட அவர் பணம் கட்ட வேண்டும்.
இல்லையெனில்
மீதம் உள்ள 9 பேரும் அந்த ஒருவர் பணத்தை சேர்த்து கட்ட வேண்டும்,
இது துவக்கம்.
20,000 கட்டி முடித்த உடன் 40,000 என
கடன் தொகை அதிகரிக்கப்படுகிறது….
40,000 த்திற்க்கு அசலும் வட்டியும் சேர்த்து 2 வருடங்களுக்கு
வாரம் 490 வீதம்
கட்ட வேண்டும்….
ஒரு நாளைக்கு 100,150 ரூபாய்க்கு கூலிக்கு வேலை செய்யும பெண் வாரம் 600 ரூபாய்
கடன் கட்ட
நிர்பந்திக்கப்படுகிறார்…
கணவன் மனைவி 2 பேரும் வேலைக்கு
செல்லும் குடும்பத்தில் இது பெரிய பாரம் இல்லை…
ஆனால்,
கணவனை இழந்த, (கணவன் இருந்தும் இல்லாத) குழந்தைகளை வளர்த்து வரும் பெண்களால் வாரம் ரூ 600 எப்படி கட்ட முடியும்…???
வேலை இல்லாத வாரங்களிலும்,
பண்டிகை, விடுமுறை
வாரங்களிலும் கூட கட்டாயம் பணம் கட்டியே ஆக வேண்டும்.
(கந்து வட்டிக்காரன் கூட வேலையில்லை அடுத்த வாரம் தருகிறேன்
என்றால் போய் விடுவான்)
இதனால் குழுவுக்கு பணம் கட்ட வேண்டும்,
என்று அக்கம் பக்கம்
உள்ளவர்களிடமும்,
தெரிந்தவர்களிடமும்
கடன் வாங்குகிறார்கள்.
ஏற்கனவே வாங்கிய கடனுடன் இந்த கடனும் சேர்வதால்,
வேறு 10 பெண்களுடன்
சேர்ந்து வேறு நிதி நிறுவனத்தில் குழு கடன் பெறுகிறார்.
எனக்கு தெரிந்த வரையில் 2,3 நிதி நிறுவனங்களில்
20,000
40,000
என 1 லட்சம் வரை
ஒரு பெண் கடன் பெறுகிறாள்.
வாங்கிய கடனுக்கு..
1வாரத்திற்க்கு,
1 குழுவிற்க்கு ரூ 600 வீதம்…
3 குழுவிற்க்கு
1,800 முதல்
2,000 ரூபாய் வரை
ஒரு பெண் கடன் கட்ட வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆளக்கப்
பட்டுள்ளார்கள்…..
விசைத்தறி கூலி வேலை செய்யும் ஒரு பெண் வாரம் ரூ 2,000
எப்படி கட்ட முடியும்….???
குழு பணம் கட்ட வேண்டும் என்று பெண்கள் வீடு வீடாக சென்று பிச்சை எடுக்காத குறையாகவும்…
பிச்சை எடுத்தும்
பணம் கட்டுகிறார்கள்…
பணம் கட்டவில்லை என்றால் மற்ற 9 பெண்களும் சேர்ந்து
அந்த பெண்ணின் வீட்டிற்க்கு சென்று
கண்டபடி திட்டுகிறார்கள்…
(மேலே கூறியுள்ளவை அனைத்தும் நம் அக்கம் பக்கத்து வீடுகளில் அன்றாடம் நடைபெறும்
சம்பவங்கள்….)
எத்தனை நாளைக்கு
இப்படி அடுத்தவர்களிடம் பிச்சை எடுப்பது,
திட்டுவாங்குவது என
நினைத்து விரக்தியில் இருக்கும் பெண்கள்,
எடுக்கும் முடிவு
விபரீதமாக மாறுகிறது பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி மன அழுத்தத்தில் பாதிக்கப்படுகிறார்கள்…….
அந்த பெண்ணுக்கு நாள் ஒன்றுக்கு கடன் கட்ட ரூ500 தேவைப்படுகிறது
சில பெண்கள் தற்கொலை செய்ய துணிகிறார்கள்,சிலர் குழந்தைகளுக்காக
நடை பிணமாக வாழ்கிறார்கள்…….
நான் மேலே கூறியுள்ளவைகள் அனைத்தும் நம்மை சுற்றி தினமும்
நடக்கும் உண்மை சம்பவங்களே……..
இதில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களை மட்டும் குற்றம் சாட்டி விட முடியாது மகளிர் சுய உதவி குழுக்களில் கடன் வாங்குபவர்கள் அதனை அடைப்பதற்கான நிதி ஆதாரங்களை ஆராய்ந்த பிறகே வாங்க வேண்டும் ஏனென்றால் இது பல மாதங்கள் வருடங்கள் நீளக்கூடியது பெரும்பாலானோர் கல்யாணம் காதுகுத்து வீட்டு விசேஷங்கள் செய்முறை சுற்றுலா செல்போன் டிவி ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்காக குழுவில் பணத்தை வாங்கி க்கொண்டு அடைக்க முடியாமல் திண்டாடுகின்றார்கள் நிதி உதவி கடன்கள் கண்டிப்பாக அடைக்க கூடிய வளரக்கூடிய தொழில் வாய்ப்புகளுக்காக மட்டுமே வாங்க வேண்டும் அப்போது மட்டுமே நீங்கள் தப்பிக்க முடியும் மேற்கூறியவற்றிற்காக வாங்கினால் அல்லலோகப்பட வேண்டியது தான்….
இந்த விசயத்தை நாம் நம் வீட்டு பிரச்சனையாக முன்னெடுத்து,
நமது பெண்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தி நம் பெண்கள் காப்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்…..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.