தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் மலையடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் தைப்பூச தினத்தை முன்னிட்டு நேற்று காலையில் 16 வகையான திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெறும். இந்த தைப்பூச திருவிழாவையொட்டி இன்று மாலையில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானையும், முத்துக்குமாரசுவாமி தெய்வானையுமாக சமகாலத்தில் 2 தெய்வானை, 2 முருகப்பெருமான் எழுந்தருளி கோவிலுக்குள்ளே திருவாட்சி மண்டபத்தை சுற்றி நலம் வந்து அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.தொடர்ந்து திருவாச்சி மண்டபத்தில் இரண்டு முருக பெருமான் இரண்டு தெய்வானை சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருப்பரங்குன்றம் கோவில் தைப்பூச தினத்தை முன்னிட்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சுப்பிரமணியசாமி, தெய்வானை, முத்துக்குமரவேல், தெய்வானை இரண்டு பல்லாக்கில் முருகப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளித்தது தனி சிறப்பாகும்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.