
நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காட்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில் 27 விமான விபத்துகள் நடந்துள்ளன.
1992ல், காத்மாண்டு அருகே ஒரு பாகிஸ்தான் விமானம் விபத்துக்குள்ளானதில் 167 பேர் இறந்தனர்.
அதே ஆண்டு தாய் ஏர்வேஸ் விமானம் காத்மாண்டு அருகே விபத்துக்குள்ளானது 113 பேர் பலியாகினர்.
2012ல் நடந்த விபத்தில் 15 பேரும், 2018 விமான விபத்தில் 51 பேரும் உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டு தாரா ஏர் விமானம் மலையில் மோதி 22 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர், 10 வெளிநாட்டவர் உள்பட 72 பேர் ( அனைவரும்) உயிரிழந்துள்ளதாக சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.