நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளரின் தந்தை காலமானார்: சீமான் இரங்கல்!


நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றி குமரன் அவர்களின் தந்தை செல்லப்பெருமாள் அவர்கள் நேற்று 19.2.2023 இரவு காலமானார். அன்னாரது இறுதிச்சடங்கு இன்று மாலை பைபாஸ் சாலையில் துரைச்சாமி நகரில் அவர்களது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் என் ஆருயிர் தம்பி வெற்றிக்குமரன் அவர்களின் அன்புத்தந்தை ஐயா நா.செல்லப்பெருமாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரிதும் துயரம் அடைந்தேன்.
தம்பி மட்டுமின்றி அவரது குடும்பத்தில் உள்ள அனைவருமே தமிழ்த்தேசிய அரசியல் மீதும், நாம் தமிழர் கட்சியின் மீதும் மிகுந்த பற்றுதலும், ஈடுபாடும் கொண்டவர்கள். நான் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் என் மீது மிகுந்த அன்பு பாராட்டி, ஊக்கமளிக்கும் அப்பாவின் மறைவு என்னை மிகவும் பாதித்துவிட்டது.
பேணி வளர்த்த பேரன்புமிக்க தந்தையின் ஈடு செய்ய முடியாத இழப்பால் துயரில் வாடும் தம்பி வெற்றிக்குமரனுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்குகொள்கிறேன்.

அப்பா நா.செல்லப்பெருமாள் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!