நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அங்கீகரித்தது அமெரிக்கா…

நித்யானந்தாவின் தனித் தீவான கைலாசாவுக்கு அமெரிக்காவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல சிறப்பு நாடு என்ற அடையாளத்தையும் கொடுத்தது அமெரிக்கா. அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சட்டம் உள்ளது. யாருடனும் அவர்கள் சொந்த ஒப்பந்தங்களை செய்யலாம்.பல நாட்கள் இது குறித்த மர்மம் நீடித்து வந்த நிலையில், அவர் தனி நாடு கோரி ஐநாவில் விண்ணப்பித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில்தான் அமெரிக்காவின் நெவார்க் நகரத்துடன் கைலாசா சார்பில் ஒப்பந்தம்

மேற்கொள்ளப்பட்டுள்ளது.பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார். இந்நிலையில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டை இறையான்மை பெற்ற நாடாக அங்கீகரித்து இருக்கிறது அமெரிக்க நெவார்க் நகர நிர்வாகம்.இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக கையெழுத்தாகிறது.நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நிவார்க் நகரத்தின் சார்பில் அதன் மேயரும் கைலாசாவின் தூதர் விஜயப்பிரியா நித்யானந்தாவும் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!