
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகோ உள்ளது பொங்கலூர் ஒன்றியம். இப்பகுதிக்குட்பட்ட மாதப்பூர் ஊரட்சியில் திடீரென திமுக கட்சிக்கொடி மற்றும் தோரணத்துடன் அலுவலகம் திறக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதப்பூர் ஊராட்சி மன்றத் தலைவராக பாஜக வை சேர்ந்த அசோக்குமார் உள்ளார்.
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டுவந்த நிலையில் மாதப்பூர் கிராமத்தில் பேருந்து நிலையம் பின்புறம் இன்று திமுக கட்சி தோரணம் மற்றும் கட்சிக்கொடி கட்டிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.இந்த கட்டிடம் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் நூலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டிடம் அமைந்த பகுதி க.ச.எண் 98/1 ல் அமைந்துள்ளதாக வருவாய்த் துறை பதிவேட்டில் உள்ளது. சுமார் 4. 48 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த இடம் மயான பூமி ஆகும்.

மயான பூமியில் வேறு பயன்பாட்டிற்கு அரசு அனுமதி கொடுப்பதில்லை.இந்நிலையில் ஆளும் கட்சியின் கொடி மற்றும் தோரணத்தை கட்டி ஆக்கிரமிப்பு செய்தால் யாரும் கேட்கமாட்டார்கள் என்கிற தைரியத்தில் இது போன்று செயலில் ஈடுபட்டது யார் ? மயான பூமியில் மையம் கொண்டிருக்கும் கட்டிடம் திமுக அலுவலகமா ? அல்லது திமுக கட்சி அடையாளத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனரா? கொந்தளிக்கும் பொதுமக்களுக்கு பதில்?வி.ஏ.ஓ அலுவலக ஜன்னலை திறந்து பார்த்தாலே ஆக்கிரமிப்பு இடம் தெளிவாக தெரியும்.
ஆனால் விடுமுறை நாட்களை பயன்படுத்தி இது போன்ற கட்டிடத்தை கட்டியுள்ளனர். ஆளும் கட்சி அடையாளத்துடன் இது போன்று ஆக்கிரமிப்பை அகற்றாமல் விட்டால் மயான பூமி விரைவில் மாயமாவது உறுதி!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.