மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள, மதுரை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்திற்கு , திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி பகுதிக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு கட்சியில் புதிதாக நியமித்தவர்கள், திருமங்கலத்தில் உள்ள திமுக அலுவலகத்திற்கு , தங்களது வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக மேளதாளங்கள் மற்றும் கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்டவற்றுடன் பட்டாசுகள் வெடித்தும் , தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாக

புறப்பட்டு வந்து, மாவட்டச் செயலாளர் மணிமாறனுக்கு , திருமங்கலம் தெற்கு ஒன்றியச்செயலாளர். ஆலம்பட்டி சண்முகம், கிழக்கு ஒன்றியச்செயலாளர் தங்கப்பாண்டியன், கள்ளிக்குடி தெற்கு ஒன்றியச்செயலாளர் மதன்குமார் ஆகியோர் வெற்றி மாலை சூடி

வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னதாக இவ்விழா காரணமாக மதுரை – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் வெள்ளம் என திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.