விவசாயிகள் வேதனை: நிலையூர் கண்மாய் மடையில் சேதம்! வீணாகும் தண்ணீர்? வருவாய் கோட்டாட்சியர் தீடீர் ஆய்வு!

மதுரை மாவட்டத்தில் உள்ள நிலையூர் கண்மாயிக்கு வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரும், சமீபத்தில் பெய்த தொடர் மழையாலும் கண்மாய் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கின்றன. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மறுகால் பாய்ந்தது. கண்மாய் நிரம்பியதையொட்டி பெருமகிழ்ச்சியுடன் விவசாயிகள் அவர்களது நிலங்களில் நாற்று நடும் பணி யில் முழுவீச்சில் ஈடுபட்டு விவசாய பணிகளை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் கண்மாயின் சிறிய மடையானது பழமைவாய்ந்ததாலும், சேதமடைந்து இருந்ததை பொதுப்பணித்துறையினர் சீரமைக் கப்படாததாலும் நேற்று இரவு திடீரென்று மடையில் இலேசான விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வீணாக வெளியேறியது.
அதை அறிந்த விவசாயிகள் சேதமடைந்த மடையையொட்டி டிராக்டர் மற்றும் JCB இயந்திரம் மூலம் மண்பரப்பும் பணியில் ஈடுபட்டனர்.ஆனாலும் தண்ணீர் கசிவு நிற்காமல் வயல்வெளிக்கு சென்றவாறு இருந்தது. இதில் நாற்றுக்கு சேதம் ஏற்படுமோ? என்ற அச்சத்தில்விவசாயிகள் வேதனையடைந்துபொதுப்பணித்துறை உயர் அதிகாரளுக்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் சேதமடைந்த மடையை சீரமைத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, நிலையூர் கிராம நிர்வாக அலுவலர் கந்தவேல் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் பார்த்தீபன் ஆகியோர் சேத மடைந்தமடையை பார்வை யிட்டார்கள். இதையடுத்து நேற்று இரவு 9.15 மணியளவில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் (RDOபொறுப்பு) சவுந்தரியா அவர்கள் நேரடியாக மடையை ஆய்வு செய்தார். மேலும் அவர் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.