மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் திரு.வி.க மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் திருவிழா என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது.
அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனுடன் கவிஞர் ரவி நடுவராக இருந்து மாணவ மாணவிகளிடம் திருக்குறள் கேள்விகளை கேட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்தார்.
மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்டு பதில்களை வழங்கினர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கரங்களால் பதக்கங்கள் அனுவித்து வழிகாட்டி மணிகண்டன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்.
மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக பள்ளி வளாகத்தில் அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் தலைமை ஆசிரியர் செல்வநாதன் அழைப்பை ஏற்று வழிகாட்டி மணிகண்டன் விழிப்புணர்வு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
மாணவிகள் கல்வியில் முழுமையாக கவனம் செலுத்தும் அதே வேளையில் ஆசிரியர்கள் வழிகாட்டலுடன் பசுமை பணிகள் மற்றும் தன்னார்வ பணிகளிலும் ஈடுபட்டு இயற்கைக்கும் மனிதர்களுக்கும் பயன்பட்டு வாழ வேண்டும். தங்களது ஒவ்வொரு பிறந்த நாளிலும் குறைந்தது ஒரு மரக்கன்றாவது நடவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் சமூக ஆர்வலர்கள் ரமேஷ்குமார், உபண்யாஸ் சரவணகுமார், கவிஞர் ரவி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்திய வழிகாட்டி மணிகண்டன் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் தலைமை ஆசிரியர் நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.