சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் வராததால் பொதுமக்கள் அவதி!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக மகேஸ்வரிவீரபத்திரன் துணைத் தலைவராக சாமி சித்தாண்டி ஊராட்சி செயலாளராக விக்னேஷ் இருந்து வருகிறார்கள். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் குறைகளை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை முறையுட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றனர்.
மாறாக புகார் கூறுபவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். சுமார் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மேலக்கால் ஊராட்சியின் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஆதிதிராவிடர் காலனி பகுதிக்கு வரும் குடிநீர் குழாய் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உடைந்து பழுதடைந்துள்ளது.
இதனால் அந்த பகுதியில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளனர் இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் ஊராட்சி செயலாளர் கவனத்திற்கு பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால்.வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு செய்து பழுதடைந்த.குடிநீர் குழாயை சரி செய்து ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு குடிநீர் முறையாக வழங்க ஆவண செய்யும்படி அந்தப் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.