காரின் மீது பைக் மோதி பெல்டி அடித்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கன்னியாகுமரி-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த தோப்பூரில் அமைந்துள்ள நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் இருந்து ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் விபத்துகள் அதிகம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அவ்வப்போது நடந்து வந்தது. இதை அடுத்து திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் நடவடிக்கையில் அவ்வழி அடைக்கப்பட்டது.
இதையடுத்து அவ்வழியே வரும் வாகனங்கள் நான்குவழிச்சாலையை கடந்து மதுரை மற்றும் திருமங்கலம் பகுதிக்கு செல்ல முடியாமல், ஒரு வழிப்பாதை மூலம் தோப்பூர் பாலத்திற்கு அடியில் சென்று பிரதான சாலையை அடைந்து பின்னர் மதுரை மற்றும் திருமங்கலம் செல்லும் வாகனங்கள் செல்கின்றனர். இருந்தாலும் ஒரு வழிப்பாதை வழியே செல்வதால் வாகன விபத்துகள் அதிகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனையில் இருந்து மதுரை செல்வதற்காக ஒரு வழிப்பாதை வழியாக தோப்பூர் பாலத்தை நோக்கி வந்த கார் மீது, ராஜபாளையத்திலிருந்து மதுரை நோக்கி மின்னல் வேகத்தில் விலை உயர்ந்த மோட்டார் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர் எதிரே வந்த கார் மீது மோதி பெல்டி அடித்தவாறு கார் கண்ணாடி மீது விழுந்ததில் கார் கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் கார் மற்றும் பைக்கின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக சிறுகாயங்களுடன் நூலிலையில் உயிர்தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.