- மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் 121வது பிறந்த நாளையொட்டி இன்று (7.2.2022) செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணியளவில் மதுரையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தேவநேயப் பாவாணர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மகளிர் ஆயம் தலைவர் அருணா அவர்கள் மாலை அணிவித்தார்.
இந்நிகழ்வில் கதிர் நிலவன் தமிழ்த்தேசிய பேரிக்கத்தின் மதுரை மாநகர் செயலாளர், மகளிர் ஆயம் தலைவர் அருணா, பொதுக்குழு உறுப்பினர்கள் மேரி,ரெ.இராசு, மற்றும் விடியல் சிவா, கரிகாலன், அறிவழகன், மலையரசன், மு.கருப்பையா, அன்பு, அருளர் மற்றும் அண்மையில் மறைந்த பாவாணர் பேத்தி பரிபூரணம் அவர்கள் கணவர், மகன், மகள் உள்ளிட் பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதேசமயம் பாவாணர் பிறந்த நாள் விழாவை புறக்கணித்த திராவிட மாடல் அரசு! என குற்றம்சாட்டினர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 7ஆம் நாள் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு தேவநேயப் பாவாணருக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நாளேடுகளில் எந்த விளம்பரமும் இல்லை. மதுரையில் ஆவின் பால் பண்ணை அருகிலிருக்கும் தேவநேயப் பாவாணர் நினைவு மண்டபத்தில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் பெரு மக்கள் எவரும் மாலை அணிவித்து மரியாதையும் செலுத்த வில்லை. மாவட்ட ஆட்சியர் மட்டுமே மாலை அணிவித்து உள்ளார்.
நேற்று மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய மகளிர் நலத் திட்ட விழாவில் நிறைய அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், இன்றைய பாவாணர் பிறந்த நாள் விழாவை புறக்கணித்தது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும். தமிழுக்கானது , தமிழருக்கானது என்று மார்தட்டக் கூடிய திராவிட மாடல் அரசு தன்னை திருத்திக் கொண்டு வருங்காலங்களிலாவது பாவாணருக்கு சிறப்பு செய்திட முன் வர வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.