மதுரை மன்னர் கல்லூரியில் வர்த்தக கண்காட்சி நடைபெறுகிறது.

மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டு துறை சார்பாக கண்காட்சி 2 நாள் கண்காட்சி இன்று துவங்கியது.

கல்லூரி செயலாளர் விஜயராகவன் வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

மதுரையின் முன்னணி நிறுவனங்களின் வீட்டு உபயோக பொருட்கள், ஆட்டோமொபைல்ஸ், ஆர்கானிக் பொருட்கள் ,நர்சரி பொருட்கள், புத்தகங்கள் டெக்ஸ்டைல்ஸ், பல வகையான உணவுப் பொருட்கள் மொத்தம் 75கும் மேற்பட்ட கடைகள் இந்த கண்காட்சியில் பங்கு பெற்றன.

கல்லூரி நிர்வாகம் சார்பில் 30க்கும் மேற்பட்ட கடைகள் நடத்த மாணவர்களுக்கு அனுமதி அளித்தனர். இதன் மூலம் மாணவர்கள் பெரிய கடைகள் வைத்திருப்பவர்கள் வரும் வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்.

இதன் மூலம் தங்களின் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் எப்படி அணுகுவது அவர்களை தாங்கள் விற்கும் பொருட்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைப்பது என்று மாணவர்கள் செயல் திறன் மூலம் கற்று கொள்வர் என்றும், இறுதியாண்டு முடித்து தங்களின் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு படி எடுத்து வைக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வணிகவியல் பேராசிரியர் நாகஜோதி கூறினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!