10 ஆயிரம்பேர் இணையும் விழா..! EBS வருகை… JCB வாகனம் மூலம் மாலை போட்ட அதிமுக நிர்வாகிகள்.


மதுரை விமான நிலையம் அருகே வலையங்குளம் பகுதியில் இன்று நடைபெற உள்ள 10ஆயிரம் பேர் இணையும் விழாவானது, முன்னாள் மதுரை பாஜக மாவட்ட தலைவரும் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் தலைமையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இணையும் விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை மதுரை வழியாக நெல்லை சென்று அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்டு சாலை மார்க்கமாக மதுரை வருகை தந்த முன்னாள் முதல்வர் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மதுரை- திருமங்கலம் செல்லும் சாலையில் உள்ள திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட கூத்தியார்குண்டு பகுதியில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும்., புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் 1000 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் 100 மேற்பட்ட நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வந்தது.
மதுரை வருகை தந்துள்ள அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில், கூத்தியார்குண்டு பகுதியில் அதிமுக கழக கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவருக்கு 100 கிலோவில் JCB கிரேன் வாகனம் மூலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்கள் மத்தியல் பேசியதாவது: மாற்றி மாற்றி பேச கூடிய திமுக ஆட்சியின் முதல்வர் இன்றைக்கு ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். ஏழை எளியோருக்கு கொண்டு வந்த திட்டத்தை இன்றைக்கு திமுக அரசு முற்றும் முழுதாக நிறுத்தி உள்ளது. வயது முதியோருக்கு கொடுத்த முதியோர் ஓய்வூதிய திட்டத்தை இன்றைக்கு திமுக அரசு இறக்க குணம் இல்லாத., அரக்க குணம் படைத்த திமுக அரசு அதை தடுத்து நிறுதியுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட கூத்தியார்குண்டு பகுதியில் பொதுமக்களிடம் பேசினார்.

இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். புறநகர் கிழக்கு மாவட்ட இணைச்செயலாளர் துரை பிச்சை ராஜன், கிளைக்கழக செயலளார்கள் மாயழகு, போத்திராஜன் மற்றும் அக்கட்சியின் கிளை நிர்வாகிகள் அழகர்சாமி, மூக்கன், ஆறுமுகம், சந்திரன், பாண்டி, கருணாகரன், ராமமூர்த்தி, ராஜாமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!