
தமிழர்களின் பண்டிகைகளுள் மிக முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை. தை முதல்நாள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை அன்று வீடுகளில் கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, கதிரவனுக்கு படையலிட்டு மக்கள் கொண்டாடுவர். பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தை பிடிப்பது கரும்பு மற்றும் மஞ்சள் கொத்தும் தான். அதிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்புவது கரும்பைதான். தைப்பொங்கல் திருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள் கொத்து விற்பனை சூடுபிடித்தது.
தமிழக அரசு சார்பாக
பொங்கலுக்கு நேரடியாக விவசாயிகளிடம் சென்று கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு ஒரு கரும்பின் விலை 33 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவற்றை தமிழக அரசு வழங்கியது.
இந்நிலையில் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் தேவர் சிலை எதிரே கண்ணதாசன் மணி மண்டபம் அருகில் 2 ரூபாய்க்கு கரும்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கட்டு கரும்பு 400 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் சூழலில், நேற்றும் இன்றும் ஒரு கரும்பை 2 ரூபாய்க்கு விற்கப்படுவது விவசாயிகளிடையே, மக்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து அந்த கரும்பு வியாபாரி கூறியபோது:

அரசு கொள்முதல் செய்த விலையைவிட கூடுதல் விலைக்கு விவசாயிகளிடம் இருந்து வாங்கி நேற்றைய முந்தைய நாள் வரை ஒரு கட்டு கரும்பு 400 ரூபாய்க்கு விற்றதாகவும், மீதமுள்ள கரும்புகளை நேற்று முதல் மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து விவசாயத்தை பாதுகாக்கும் நோக்கில் ஒரு கட்டு கரும்பு 20 ரூபாய்க்கு அதாவது ஒரு கரும்பை 2 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் மேலும் இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி சாக்கோட்டை ஒன்றிய துணைத் தலைவராக நாம் தமிழர் கட்சியில் இருப்பதாகவும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.