துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளை முயற்சி… திண்டுக்கல்லில் பட்டப் பகலில் பரபரப்பு! பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி.

திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பகுதியில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து வங்கி ஊழியர்களை கட்டி போட்டு மிளகாய் ஸ்ப்ரே அடித்து வங்கியில் கொள்ளை முயற்சி ஈடுபட்டுள்ளார்.

இதை பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் நெட்டு தெருவை சேர்ந்த கலீல் ரகுமான் (வயது 23,) என தெரியவந்துள்ளது.

கொள்ளையில் ஈடுபட முயன்ற நபரை நகர் மேற்கு காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் துணிவு படத்தைப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. செய்தியாளர் வி காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!