மலேயாசியாவில் படகு விபத்து.. நடிகர் விஜய் ஆண்டனி மருத்துவமனையில் அனுமதி!

மலேசியாவில் ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பின் போது படகு விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி காயமடைநதுள்ளார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்தார்.பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார்.தற்போது மலேசியாவில் லங்காவி தீவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது படகு விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிச்சைக்காரன் 2 படத்தின் முன்னோட்டம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தனது விஜய் ஆண்டன் புரொடக்சன்ஸ் மூலம் பிச்சைக்காரன் 2 படத்தைத் தயாரித்து, இசையமைப்பாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் விஜய் ஆண்டனி.பிச்சைக்காரன் 2 படத்தில் ஜான் விஜய், ஹரிஷ் பெரடி, ஒய்.ஜி.மகேந்திரன், அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, கொலை ,ரதம்,மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களும் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!