
தமிழக இளைஞர்களை வட மாநிலத்தவர்கள் அடித்து விரட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் அண்மையில் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் நடந்தது என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், உலகத் தமிழ் அமைப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வடக்கன்கள் வந்து
இன்று திருப்பூரில் கலாட்டா
நாளை ஊர் ஊராய் வந்து
காட்டிடுவான் டாடா….
சந்து பொந்தெல்லாம்
பாணிபூரி வந்தது
நம் பாட்டி போட்ட
போண்டா வடை போனது…
அடகு கடையெல்லாம்
உயிலெழுதிக் கொடுத்து
மகிழ்ச்சிகளெல்லாம் அடகு வைத்து நிம்மதியை தொலைத்தோம்..
மாநகர்களை சுற்றும் பொழுது
நமக்கே சந்தேகம் வருகிறது
நாம் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றோமா என்று…
வடக்கன்கள் இல்லாத பணியே
இல்லாமல் போனது
அவன் திசைகாட்டுதலில்
இயங்கும் படியானது…
பொறுத்தோம்…
இவர்களும் பிழைக்க
வந்தவர்கள் தானே
நாமெல்லாம் இந்தியர்கள் என்று…
ஆனால்..,
நம் இளைஞனை
விரட்டி அடிக்கிறான்
மௌனம் காப்பது முறையா…?
ஜல்லிக்கட்டுக்கு துள்ளி எழுந்தோம் அல்லவாஇந்த மல்லுக் கட்டுக்கு என்ன செய்ய போகிறோம்..?
தமிழா ஒன்றிணை
நமக்கு யார் இணை…
உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கத்தின் நிறுவுநர் வெண்பா அவர்கள் கவிதை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.